சர்ச்சை கேள்வியால் அமிதாப் மீது வழக்கு பதிவு

டிவி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட சர்ச்சை கேள்வியை தொடர்ந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அமிதாப் பச்சன் பங்கேற்ற டிவி நிகழ்ச்சி ஒன்றில் ‘1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி டாக்டர் அம்பேத்கரும், அவரது ஆதரவாளர்களும் எந்த நூலின் நகலை எரித்தனர்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. நான்கில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என விடைகளாக, விஷ்ணு புராணம், பகவத்கீதை, ரிக்வேதம், மனுஸ்மிருதி ஆகிய நூல்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்த கேள்வி தொடர்பாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அனைத்திந்திய இந்து மகாசபாவின் மாநில தலைவர் ரிஷி குமார் என்பவர் உத்தரபிரதேச மாநிலம், திரிவேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘டிவி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி கண்டனத்திற்குரியது. இது சமூகத்தில் சாதி ரீதியிலான வேற்றுமைகளை ஏற்படுத்தும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து போலீசார் அமிதாப் பச்சன் மீதும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>