×

தியேட்டர்களை திறந்தாலும் புதுபடம் திரையிட மாட்டோம்: பாரதிராஜா அறிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்தன. இந்நிலையில் வரும் 10ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர்களுக்கும். தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கின்றனர். இதுதொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் மாதம் தொடங்கியவுடன் இனிமேலும் விபிஎப் என்கிற கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அனைவருக்கும் மற்றும் அனைத்து டிஜிட்டல் புரஜக்‌ஷன் நிறுவனங்களுக்கும் முறையாக கடிதம் அனுப்பினோம். அதில் 12 வருடங்களுக்கு மேலாக கட்டி வரும் விபிஎப் என்ற கட்டணத்தை வாரம்தோறும் இனிமேல் கொடுக்க முடியாது.

டிஜிட்டல் நிறுவனங்கள் மாஸ்டரிங் க்ளோனிங் டெலிவரி மற்றும் சேவைக்கான ஒருமுறை கட்டணம் எதுவோ அதை மட்டுமே இனிமேல் எங்களால் தரமுடியும் என்று தெரிவித்திருந்தோம். திரையரங்கில் உள்ள புரஜக்டர் சம்பந்தப்பட்ட லீஸ் தொகையை திரையரங்குகள் தான் கட்ட வேண்டும், தயாரிப்பாளர்கள் அல்ல என்பதையும் தெளிவாக குறிப்பிட்டு இருந்தோம். இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் எங்களின் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம்.

Tags : theaters ,Bharathiraja ,
× RELATED பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே...