ஆமிர்கான் மீது பாஜ எம்எல்ஏ போலீசில் புகார்

பாலிவுட் நடிகர் ஆமிர்கான் மீது பாஜ எம்எல்ஏ போலீசில் புகார் அளித்துள்ளார். ஆமிர்கான் நடிக்கும் படம் லால் சிங் சட்டா. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்திலுள்ள டிரோனிகா நகரில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் ஆமிர்கான், பட நாயகி கரீனா கபூர் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில் லோனி தொகுதி பாஜ எம்எல்ஏ நந்து கிஷோர் குஜ்ஜார், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘லால் சிங் சட்டா படத்தின் படப்பிடிப்பின்போது ஆமிர்கான் முகக் கவசம் அணியவில்லை. படப்பிடிப்பில் அவர் சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. பல இடங்களில் அவர் கூட்டத்தை கூட்டிவிட்டார். அரசின் எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் ஆமிர்கான் பின்பற்றவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். சில வாரங்களுக்கு முன் இதே படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடந்தது. அப்போது துருக்கி நாட்டு அதிபரின் மனைவியை ஆமிர்கான் சந்தித்தார். அப்போது பாஜ இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>