×

மாஸ்டர் தீபாவளிக்கு வெளியாகாது: தயாரிப்பாளர் தகவல்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் தீபாவளிக்கு திரைக்கு வராது என அப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டியது. கொரோனா பாதிப்பு காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் வரும் 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தீபாவளிக்கு மாஸ்டர் படம் திரைக்கு வருமா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் படத்தை வெளியிட உள்ள தயாரிப்பாளர் லலித்குமார் கூறும்போது, ‘மாஸ்டர் படம் தீபாவளிக்கு திரைக்கு வராது. படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்றார். தற்போது 50 சதவீத இருக்கைகள் மட்டும் நிரப்பி, தியேட்டர்களில் படத்தை வெளியிட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மாஸ்டர் படத்தின் வெளியீட்டை சில மாதங்களுக்கு தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Tags :
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்