×

கடும் எதிர்ப்பு காரணமாக லாரன்ஸ் பட தலைப்பு மாற்றம்

கார்னிசேனா அமைப்பின் கடும் எதிர்ப்பு காரணமாக, ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள இந்தி படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், லட்சுமி பாம் என்ற பெயரில் இந்தி படம் இயக்கியுள்ளார். அக்‌ஷய்குமார், கியரா அத்வானி நடித்துள்ள இந்த படம், தமிழில் வெளியான காஞ்சனா படத்தின் ரீமேக் ஆகும். தீபாவளியை முன்னிட்டு இம்மாதம் 9ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘இந்த படத்தின் தலைப்பு லட்சுமி பாம் என இருப்பதை ஏற்க முடியாது. லட்சுமி, இந்து மத கடவுளின் ெபயர். எனவே படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும்’ என கார்னிசேனா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து படத்தின் தலைப்பை லட்சுமி என்று மட்டும் மாற்றி அமைத்துள்ளனர். இப்போது வெளியாகும் விளம்பரங்களில் லட்சுமி என்று மட்டுமே தலைப்பு வெளியாகிறது.

Tags : Lawrence ,
× RELATED மகளிர் தின விழா