ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ அர்னால்டுக்கு இதய ஆபரேஷன்

பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ அர்னால்ட் ஸ்வார்ஸ்நேகர். டெர்மினேட்டர், ஜட்ஜ்மெண்ட் டே, கமாண்டோ, பிரடியேட்டர் படங்களின் மூலம் உலக புகழ்பெற்றவர். பாடி பில்டராக இருந்து நடிகர் ஆனவர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கவர்னராகவும் பதவி வகித்தவர். தமிழில் 2.0 படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. சில பிரச்னைகள் காரணமாக நடிக்க முடியாமல் போனது. விக்ரம் நடித்த ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார்.

73 வயதான அர்னால்டுக்கு சில வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் நடந்தது. அதன்பிறகு ஆக்‌ஷன் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது மீண்டும் ஒரு ஆபரேஷன் நடந்துள்ளது. இதயத்தில் பளுதான ஒரு வால்வை மாற்றும் ஆபரேஷன் இது. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது: மருத்துவ குழுவுக்கு மிகவும் நன்றி. நான் இப்போது அருமையாக என்னை உணர்கிறேன். எனக்கு தாயை போன்று சேவை செய்த செவிலியர்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: