×

ஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று

பிரபல நடிகை ஷார்மி. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹெதராபாத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது இவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஷார்மியின் தாய், தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.சி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஷார்மி கூறியிருப்பதாவது: கொரோனா பரவல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து எனது பெற்றோர்களை மிக கவனமாக கவனித்து வந்தேன். அவர்களும் நிலைமையை புரிந்து கொண்டு தங்களை பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஆனால் ஐதராபாத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. மழை வெள்ளம் காரணமாக என் பெற்றோர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. சோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கனை நான் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். டாக்டர்களை கடவுள் போல நம்பி காத்திருக்கிறேன் என்கிறார் ஷார்மி.

Tags : Corona ,Sharmi ,
× RELATED 9 பேருக்கு கொரோனா தொற்று