நடிகர் ஆர்.கே.சுரேஷ் திருமணம்

நடிகர் ஆர்.கே.சுரேஷ், சினிமா பைனான்சியரை திருமணம் செய்துகொண்டார். தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் ஆர்.ேக.சுரேஷ். மருது, தர்மதுரை, ஹரஹர மகாதேவகி, ஸ்கெட்ச், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்தார். பில்லா பாண்டி படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்போது விசித்திரன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் சில படங்களை தயாரித்தும் உள்ளார். தோழர் வெங்கடேசன் என்ற படத்தை தயாரித்தவர் மாதவி என்கிற மது. அப்படத்தில் ஹீரோவாக நடித்த அரி சங்கரின் மனைவி. கருத்து வேறுபாடால் அவரை பிரிந்துவிட்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்.கே.சுரேஷும் மாதவியும் காதலித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் இவர்களது திருமணம் ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

Related Stories:

>