×

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது 10 வருடம் பயன்பாட்டில் இல்லாத பிடாரி குளத்தை தூர்வார கோரிக்கை

குத்தாலம் : அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பிடாரி குளத்தை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா நக்கம்பாடி ஊராட்சி கீழஅய்யனார்குடியில் உள்ளது பிடாரி குளம். இந்த பிடாரி குளமானது அதிமுக ஆட்சியில் அலட்சியத்தினால் தூர்வாரியும் சுத்தம் செய்தும் மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் 10-வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த குளத்தில் ஆகாயத்தாமரைகளும், நாணல்களும் படர்ந்து குளம் முழுவதும் காணப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இப்பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து வழிந்து, வெளியேறும் நீர் அந்த பிடாரிகுளத்திற்கு வருகிறது. குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளுடன் நீரும் சேர்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள பிடாரிகுளத்தை மழைக்காலம் முடிந்தவுடன் தூர்வாரியும் சுத்தம் செய்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது 10 வருடம் பயன்பாட்டில் இல்லாத பிடாரி குளத்தை தூர்வார கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pitari pond ,AIADMK ,Guttalam ,Mayiladuthurai district ,
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...