×

பிரித்விராஜுக்கு கொரோனா: படப்பிடிப்பு ரத்து

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜுக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் நடித்து வந்த ‘ஜன கண மன’ படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் ‘ஜன கண மன’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆன்டனி இயக்குகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு ெதாடங்கியபோது அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் நோய் தொற்று இல்ைல என்று தெரிய வந்தது.

இந்நிலையில் நேற்று முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் கொரோனோ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நடிகர் பிரித்வி ராஜ் மற்றும் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆன்டனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனக்கு நோய் அறிகுறி எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ள நடிகர் பிரித்விராஜ், தன்னுடன் தொடர்பு வைத்திருந்த அனைவரும் தனிமைக்கு செல்லவேண்டும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் தற்போது தனது வீட்டருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனிமையில் உள்ளார்.

Tags : Corona ,Prithviraj ,
× RELATED ஹாமில்டனுக்கு கொரோனா