ஓடிடியில் வெளியாகிறது நுங்கம்பாக்கம்

உளவுத்துறை, ஜனனம் உள்பட பல தமிழ் படங்களை இயக்கியவர், எஸ்.டி.ரமேஷ் செல்வன். தற்போது அவர் இயக்கி இருக்கும் படம், நுங்கம்பாக்கம். சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்வாதி கொலையை மையமாக வைத்து உருவான இப்படத்துக்கு, ஸ்வாதி கொலை வழக்கு என்று பெயரிடப்பட்டது. இதனால் இப்படத்தின் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டதால், நுங்கம்பாக்கம் என்று பெயர் மாற்றப்பட்டது. பிறகு தணிக்கை குழுவினர் சான்றிதழ் தர மறுத்தனர். இதையடுத்து நீதிமன்றம் படத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. தற்போது அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு, வரும் 24ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

எஸ்.டி.ரமேஷ் செல்வன் கூறுகையில், ‘இரண்டரை வருட போராட்டத்துக்கு பிறகு படத்தை வெளியிட உள்ளேன். இதுவரை பல கோடி இழப்பை சந்தித்துள்ளேன். வழக்கு, கைது, கொலை மிரட்டல் போன்றவற்றை கடந்துவிட்டேன்.உண்மையான ஒரு சம்பவத்தை நடுநிலையுடன் சொல்வதற்கு நிறையவே போராட வேண்டி இருக்கிறது. எனினும் நான் உறுதியாக நின்று இப்படத்தை வெளியிடுகிறேன். இனிமேல் மக்கள் கையில் தீர்ப்பு இருக்கிறது’ என்றார்.

Related Stories:

>