×

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை பாப்கட் செங்கமலத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நீச்சல் குளத்தை கட்டித்தந்த இந்து அறநிலையத் துறை..!

திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை பாப்கட் செங்கமலத்திற்கு இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் செங்கமலம் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. 34 வயதாகும் இந்த யானையின் சிகை அலங்காரத்தின் காரணமாக பாப்கட் செங்கமலம் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த யானை குளிப்பதற்காக ஏற்கனவே ரூ.75,000 செலவில் ஷவ்வர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த யானைக்கு கோயில் வளாகத்திலேயே நீச்சல் குளம் கட்டித்தர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று ரூ.10 லட்சம் மதிப்பில் இந்து அறநிலையத்துறை நீச்சல் குளத்தை கட்டி கொடுத்துள்ளது. இதனை டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்தார். கோயில் வளாகத்தில் ஈசானி மூலையில் சுமார் ஆறரை அடி ஆழம், 500 சதுரடி பரப்பளவில் இந்த குளம் கட்டப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் செங்கமலம் யானை குளித்து மகிழ்ந்த காட்சியை கோயிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.     …

The post மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை பாப்கட் செங்கமலத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பில் நீச்சல் குளத்தை கட்டித்தந்த இந்து அறநிலையத் துறை..! appeared first on Dinakaran.

Tags : Hindu state department ,Mannargudi Rajagopala Swami Temple ,Elephant ,Babcut Chengamalam ,Thiruvarur ,Mannarkudi Rajagopala Swamy Temple ,Bobkat ,Swamy ,Swamalam ,Hindu Foundation ,Mannargudi Rajagopala Swami Temple Elephant ,Bobcut Chengamalam ,Hindu Department ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்