×

இந்திய சுதந்திர வரலாற்றை எழுதிய பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மரணம்

பாரிஸ்: இந்தியாவின் சுதந்திர வரலாற்றை எழுதியவர்களில் முக்கியமான எழுத்தாளரான டொமினிக் லேபியர் காலமானார். இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிவினையின் வரலாற்றைக் கூறும் புத்தகங்களை பலர் எழுதியிருந்தாலும், பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேபியர் (91) எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது.  இப்புத்தகத்தின் இணை ஆசிரியர் லாரி காலின்ஸ் உடன் இணைந்து எழுதப்பட்ட ‘நள்ளிரவில் சுதந்திரம்’  என்ற புத்தகம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் எழுத்தாளர் டொமினிக் லேபியர், வயோதிகத்தின் காரணமாக காலமானார். இந்த தகவலை அவரது மனைவி தெரிவித்தார். கடந்த 1931ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி பிரான்சின் சாட்டிலோன்  நகரில் பிறந்த டொமினிக் லேபியரின் மறைவு, உலக எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படைப்பாளிகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்ற புத்தகம் மட்டுமின்றி, டொமினிக் லேபியரின் கொல்கத்தாவைச் சேர்ந்த ரிக்ஷாக்காரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘சிட்டி ஆஃப் ஜாய்’ புத்தகமும் மிகவும் பிரபலமானது….

The post இந்திய சுதந்திர வரலாற்றை எழுதிய பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Paris ,Dominique Lapierre ,India ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிப்பு