×

டாக்டர் ராஜசேகர் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா

தமிழில் புதுமைப்பெண், இதுதாண்டா போலீஸ், ஆம்பள, மீசைக்காரன், எவனாயிருந்தா எனக்கென்ன, தலைவா, அண்ணா உள்பட நிறைய படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர், டாக்டர் ராஜசேகர். சென்னையை சேர்ந்த இவர், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து உள்ளார். தன்னுடன் நடித்த ஜீவிதாவை காதல் திருமணம் செய்த பிறகு ஐதராபாத்தில் குடியேறினார். ஷிவானி, ஷிவாத்மிகா என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது அவர்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக டாக்டர் ராஜசேகர், ஜீவிதா, ஷிவானி, ஷிவாத்மிகா ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து டாக்டர் ராஜசேகர் நேற்று வெளியிட்ட பதிவில், ‘எனக்கும், ஜீவிதாவுக்கும், மகள்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உண்மைதான். தற்போது நானும், ஜீவிதாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறோம். மகள்கள் நன்கு குணமடைந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர். வேகமாக குணமடைந்து வரும் நானும், ஜீவிதாவும் விரைவில் வீடு திரும்புவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Rajasekar ,Corona ,
× RELATED கொரோனாவால் வேலையிழந்த தந்தை குடும்ப...