×

பிஃபா கால்பந்து போட்டிக்கான தீம் பாடலை உருவாக்கிய தமிழர்கள்: தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கௌரவித்த கத்தார் அரசு..!!

கத்தார்: தமிழர்கள் உருவாக்கிய பிஃபா கால்பந்து போட்டிக்கான தீம் பாடலை தனது தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கத்தார் அரசு கவுரவப்படுத்தியது. மத்திய கிழக்கு நாடான கத்தார், கால்பந்து போட்டியை உலக நாடுகள் பிரமிக்கும் வகையில் நேர்த்தியாக நடத்தி வருகிறது. இந்த நிலையில், பிஃபா கால்பந்து போட்டிக்கான தீம் பாடலை தமிழர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை அங்கீகரிக்கும் விதமாக கத்தார் மீடியா கார்ப்பரேஷன், கத்தார் நாட்டின் பெருமைக்குரிய தேசிய தொலைக்காட்சியான கத்தார் டிவியில் ஒளிபரப்பியுள்ளது. இந்த பாடலை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் இயக்கியுள்ளார். இந்த பாடலை மயிலாடுதுறையை சேர்ந்த சாம் ஜோசப் எழுதி இசையமைத்துள்ளார். கத்தார் மட்டுமின்றி பிரெஞ்ச், ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் உருது மொழி வானொலிகளிலும் ஒளிபரப்பி வருவது தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. முகநூலில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ பல ஆயிரம் லைக்குகளை அள்ளி வருகிறது.  …

The post பிஃபா கால்பந்து போட்டிக்கான தீம் பாடலை உருவாக்கிய தமிழர்கள்: தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கௌரவித்த கத்தார் அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Tamilans ,FIFA football ,Qatar ,Government of Qatar ,FIFA Football Tournament ,Govt ,of ,National Television ,
× RELATED தோகாவில் இருந்து சென்னைக்கு...