×

வருசநாடு அருகே மலை கிராமத்திற்கு தார்ச்சாலை வசதி வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வருசநாடு: வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சியில் கோடாலியூத்து மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கடந்த 45 ஆண்டு காலமாக இந்த கிராமத்திற்கு தார்ச்சாலை வசதி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து கிராம சபை கூட்டங்களிலும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் விவசாய பொருட்களை தேனி, ஆண்டிபட்டி போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்வதில் விவசாயிகளுக்கு சிரமமாக உள்ளது. இதுகுறித்து கிராமவாசி வனராஜா கூறுகையில், எங்கள் கிராமம் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. நாங்கள் இன்னும் நகரங்களிலிருந்து நூறாண்டுகள் பின்தங்கி உள்ளோம். எங்களுக்கு என்று எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. எனவே நாங்கள் மலைவாழ் மக்களை காட்டிலும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே எங்கள் பகுதிக்கு சாலை வசதி உடனே செய்து கொடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்….

The post வருசநாடு அருகே மலை கிராமத்திற்கு தார்ச்சாலை வசதி வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Kodalyuthu hill village ,Tummakundu panchayat ,Dinakaran ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்