×

நான் அம்மா நடிகையா? சோனியா அகர்வால் ஆவேசம்

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களில் நடித்த சோனியா அகர்வால். விஜய் ஜோடியாக மதுர படத்திலும் நடித்துள்ளார். செல்வராகவனை திருமணம் செய்த பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக செல்வராகவனை அவர் பிரிந்தார். இதையடுத்து அவர் நடிக்க வந்தாலும் முன்பு போல் படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஹீரோயின்களுக்கு அம்மாவாக வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என கேட்டபோது, முகம் சிவந்து கோபம் அடைந்தார் சோனியா. ‘யாரை பார்த்து என்ன கேள்வி கேட்கிறீங்க. இதே கேள்வியை நயன்தாராகிட்டேயோ திரிஷாகிட்டேயோ கேட்பீங்களா. அவங்க வயசுதான் எனக்கும். என்கிட்ட மட்டும் ஏன் இப்படி கேட்கிறீங்க. ஒண்ணுலேருந்து 8 வயசு வரைக்குமான பிள்ளைக்கு அம்மாவா நடிப்பேன். அது தப்பில்ல. அதுவும் ஹீரோயின் ரோலாக இருக்கணும். அப்படி இல்லாம, ஹீரோவுக்கோ ஹீரோயினுக்கோ அம்மா ஆகுற அளவுக்கு எனக்கு வயசாகல’ என ஆவேசம் பொங்க சொன்னார் சோனியா.

Tags : mother actress ,Sonia Agarwal ,
× RELATED சோனியா அகர்வால் நடிக்கும் சீரன்