×

விஜய் சேதுபதி படத்தை பாராட்டிய சூர்யா

இப்போதெல்லாம் டிவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கிறார் சூர்யா. பல விஷயங்கள் பற்றி உடனுக்குடன் கருத்துகளை தெரிவிக்கிறார். நீட் தேர்வு தொடர்பாக பரபரப்பு கருத்து கூறியவர், தொடர்ந்து மருத்துவ இடஒதுக்கீடு சம்பந்தமாக அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் டிவிட் பதிவிட்டு இருந்தார். இதேபோல் சினிமா உலகில் ஏதேனும் முக்கிய நிகழ்வு நடந்தாலும் தனது கருத்தை அவர் பதிவு செய்துவிடுகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதியவர் விருமாண்டி இயக்கிய க/பெ ரணசிங்கம் பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார் சூர்யா.

அந்த படத்தை பார்த்துவிட்ட அவர், வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் தமிழனின் துயரம், அவனது குடும்பம் எப்படி அல்லல்படுகிறது என்பதை இப்படம் தத்ரூபமாக காட்டியுள்ளதாக பாராட்டு தெரிவித்திருக்கிறார். சூர்யாவின் இந்த பாராட்டு காரணமாக படக்குழு சந்தோஷம் அடைந்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில்தான் நடித்திருந்தார். முழு படமும் ஐஸ்வர்யா ராஜேஷ் தோளில்தான் சுமக்கப்பட்டது. அவரும் தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார் என விமர்சகர்களால் பாராட்டுக்குள்ளானார். ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் இந்த படம், நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல மெசேஜ் சொல்லும் ஒரு படமாக உருவாகி இருக்கிறது.

Tags : Surya ,Vijay Sethupathi ,
× RELATED பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு...