எஸ்.பி.பியுடன் ரஹ்மான் கண்ட கனவு

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்ததும் இசையமைப்பாளர்கள் பெரும்பாலானோர் இடிந்து போயினர். அவர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். சினிமாவில் ரோஜா படம் மூலம் ரஹ்மான் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அனைத்து பாடல்களையும் எஸ்.பி.பிதான் பாடியிருந்தார். தொடர்ந்து ரஹ்மான் இசையில் பல பாடல்களை எஸ்.பி.பி பாடியிருக்கிறார். எஸ்.பி.பி எத்தனையோ முறை இசை நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் நடத்தியிருக்கிறார். அதேபோல் ரஹ்மானும் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஆனால் இருவரும் சேர்ந்து முழு நீள இசை நிகழ்ச்சியை நடத்தியதில்லை. எஸ்.பி.பி இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் அதற்காக ஒரு திட்டம் வைத்திருந்தார் ரஹ்மான்.

அதன்படி எஸ்.பி.பியுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சி ஒன்றை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என அவர் யோசித்து இருந்தார். இது பற்றி எஸ்.பி.பியுடனும் அவர் பேசியிருக்கிறார். கண்டிப்பாக நடத்தலாம் என அவரும் ஆர்வம் காட்டியிருக்கிறார். கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்த பிறகு இந்த நிகழ்ச்சியை சென்னையிலேயே நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன் பிறகு வெளிநாடுகளிலும் இதை நடத்த பேசியிருக்கிறார்கள். அதற்குள் இப்படியொரு சோகம் நடந்துவிட்டதால் ரஹ்மான் கவலையில் இருக்கிறார்.

Related Stories:

>