×

பாய் பிரண்ட் இல்லையே: ரைசா வருத்தம்

பாய் பிரண்ட் இல்லாதது வருத்தம் என சொல்லியிருக்கிறார் ரைசா வில்சன். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் ரைசா வில்சன். அதைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயின் ஆனார். அந்த படம் ஹிட் ஆகவே, அவரும் பிரபலம் ஆனார். இப்போது விஷ்ணு விஷாலுடன் எப்ஐஆர், சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தனது கிறங்கடிக்கும் கண்களால் அதிகமான இளம் ரசிகர்களை அவர் பெற்றிருக்கிறார். அப்படி இருந்தும் இதுவரை தனக்கு பாய்பிரண்ட் யாரும் இல்லை என்கிறார்.

இரண்டு தினங்களுக்கு முன் தனது டிவிட்டரில், ‘தேசிய பாய்பிரண்ட் தின வாழ்த்துக்கள். நம்மை போன்றவர்களுக்கு ஹேப்பி காதலிக்க யாருமில்லை டே’ என பதிவிட்டிருந்தார். இதை பார்த்ததும் நெட்டிசன்கள் கொத்து கொத்தாக ரைசாவுக்கு லவ் யு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ‘நீங்க ஏன் கவலைப்படுறீங்க. நான் இருக்கிறேன்’ என ஒருவர் சொல்ல, மற்றொருவர், ‘டேட்டிங் போகலாமா’ என்றும் கேட்டிருக்கிறார். இதற்கெல்லாம் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியை மட்டும் பதிலாக வெளிப்படுத்தி இருக்கிறார் ரைசா.

Tags : Raisa ,
× RELATED நீலகிரியில் மழையால் எவ்வித பெரிய பாதிப்பும் இல்லை: ஆ.ராசா பேட்டி