×

கிளாமருக்கு மாறிய அதுல்யா

கோயமுத்தூர் பெண்ணாக, அதுவும் தமிழ் பேசுபவராக இருப்பதால், குடும்பப் பாங்கான வேடங்களுக்கு மட்டும்தான் லாயக்கு என்று தன்னைப் பற்றி நினைத்துவிடுவார்களோ என்று பயந்த அதுல்யா, திடீரென்று ஏமாலி, கேப்மாரி ஆகிய படங்களில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து, தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்று சொன்னார். தற்போது சாந்தனுவுடன் முருக்கைக்காய் சிப்ஸ், சிபிராஜூடன் வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுனில் கிடைத்த ஓய்வில் தன்னை விதவிதமாக போட்டோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்த அவர், தற்போது கிளாமர் உடைக்கு மாறியுள்ளார். அந்த போட்டோக்கள் வைரலாகி வரும் நிலையில், தனது தோழி இந்துஜாவுக்கும் அறிவுரை சொல்லி, இனிமேல் தங்களால் இப்படியும் நடிக்க முடியும் என்று திரையுலகினருக்கு சொல்வோம் என்று கூட்டணி அமைத்துள்ளாராம்.

Tags : Athulya ,
× RELATED ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் அதுல்யா