ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிடுவது பெருமை இல்லை

சல்மான் கான் நடிப்பில் 2005ல் வெளியான லக்கி: நோ டைம் பார் லவ்  என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமானவர், சினேகா உல்லால். இதையடுத்து தெலுங்கு, தமிழ் உள்பட பல மொழிப் படங்களில் நடித்தார். முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கிறார் என்று சொல்லியே தனது மார்க்கெட்டை காலி செய்துவிட்டார்கள் என்று, லேட்டஸ்ட்டாக அவர் புலம்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு மிகவும் பிடித்ததே என் தோற்றம்தான். ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கிறேன் என்று பலர் சொன்னது, நான் நடிக்கும் படங்களின் விளம்பரத்துக்காகவே என்று நினைக்கிறேன்.

அவர்கள் அவ்வாறு சொன்னதை மிகப்பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இத்தனை வருடங்களாக சினிமாவில் இருப்பதன் மூலம் பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். நடிப்புக்காக நாள்தோறும் பயிற்சி பெற வேண்டி இருக்கிறது. எனவே, எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டேன். தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் எக்ஸ்பைரி டேட் என்ற தொடரில்  நடித்துள்ளேன். சிறிய இடைவெளிக்கு பிறகு ஷூட்டிங்கிற்கு சென்றதால், முதல்நாள் மிகவும் பதற்றமான மனநிலையில் இருந்ததை உணர முடிந்தது. இப்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறேன். என் கேரக்டரை நன்கு உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளேன். இனி மக்கள்தான் ஆதரவு தர  வேண்டும்’ என்றார்.

Related Stories:

>