கொரோனாவால் படவாய்ப்பு இல்லை எருமைகள் வளர்க்கும் நடிகை

1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மஞ்சு பிள்ளை. சினிமா வாய்ப்புகள் குறைந்தும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். சுஜித் வாசுதேவ் மேனன் என்ற ஒளிப்பதிவாளரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு தயா என்ற மகள் உள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் சின்னத்திரை தொடர் வாய்ப்புகளும் இல்லாததால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த அவர் தற்போது எருமைகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். ஏற்கெனவே கோழி பண்ணை, ஆட்டுப்பண்ணை நடத்தி வரும் மஞ்சு பிள்ளை அதன் தொடர்ச்சியாக எருமை பண்ணை அமைத்து எருமைகளை வளர்த்து வருகிறார். இந்த பணியில் அவரே நேரடியாக ஈடுபடுகிறார். தற்போது அவரது பண்ணையில் முரா வகையை சேர்ந்த 50 எருமைகள் உள்ளன. இந்த பணியில் கணவர் சுஜித்தும் மஞ்சு பிள்ளைக்கு உதவி வருகிறார்.