எஸ்.பி.பி பெயரில் டப்பிங் ஸ்டுடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடகர் மட்டுமல்ல பின்னணி கலைஞராகவும் இருந்தார். கமல்ஹாசன் தமிழில் நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட 120க்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். தொடர்ந்து ரஜினிகாந்த், சல்மான்கான், கே.பாக்யராஜ், மோகன், அனில் கபூர், கிரீஷ் கர்னாட், ஜெமினி கணேசன், அர்ஜுன், நாகேஷ், கார்த்திக், ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப் படங்களில் டப்பிங் பேசியுள்ளார். சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான ஆந்திரா மாநில அரசின் நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். தென்னிந்திய பின்னணி குரல் கலைஞர்கள் (டப்பிங் யூனியன்) சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் இருந்தார்.

இந்த நிலையில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உருவ படம் திறந்து வைக்கப்பட்டது. கூட்டத்தில் டப்பிங் யூனியனுக்கென்று தனியாக டப்பிங் ஸ்டுடியோ கட்டுவது என்றும், அந்த ஸ்டுடியோவுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரை சூட்டுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>