உபியில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை: பிரதமர் மோடிக்கு நடிகை திவ்யா கேள்வி

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை திவ்யா. வாரணம் ஆயிரம், பொல்லாதவன், குத்து, கிரி உள்பட பல படங்களில் நடித்தவர் ரம்யா என்கிற திவ்யா. உத்தர பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த 19 வயது பெண் திடீரென காணாமல் போனார். பின்னர் அவர் நாக்கு துண்டிக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து திவ்யா டிவிட்டரில், ‘உபியில் இளம்பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இது பற்றி வாயை திறக்க மாட்டீர்களா பிரதமரே. ஏதோ ஒரு நாட்டில் தலைவர் இறந்ததற்கு அனுதாபம் வெளியிப்படுத்தும் நீங்கள், சொந்த நாட்டில் கொல்லப்பட்ட பெண்ணுக்காக குரல் கொடுக்க மாட்டீர்களா? பெண்கள் மீதான உங்களின் மதிப்பு இதுதானா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: