நடிகை பாலியல் புகார் அனுராக் காஷ்யப்புக்கு போலீஸ் சம்மன்

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறினார். 7 ஆண்டுகளுக்கு முன்பு, சினிமா வாய்ப்பு கேட்டு சென்றபோது தன்னை பலவந்தமாக பலாத்காரம் செய்ய முயன்றதாக அவர் தெரிவித்திருந்தார். அனுராக் காஷ்யப் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பாயல் கோஷின் இந்த குற்றச்சாட்டு அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது. அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவிகள் இந்த குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாயல் கோஷ் மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் அனுராக் காஷ்யப் மீது இது தொடர்பாக புகார் அளித்தார். அதன் பிறகு நேற்று மகாராஷ்டிர மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தார். பாயல் கோஷை கவர்னரை சந்திக்க அழைத்து சென்றது மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே. இந்த சந்திப்பில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், அனுராக் காஷ்யப்பை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் அனுராக் மீது வழக்கு பதிவு செய்துள்ள வெர்சோவா போலீசார், இன்று அவர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளனர். இதற்கிடையில் நடிகை கங்கனா ரனவத்துக்கு வழங்கப்பட்டது போன்று தனக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாயல் கோஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: