மெரினா பட நடிகர் தற்கொலை

சிவகார்த்திகேயன் ஹீரோவாக அறிமுக மான படம் மெரினா. இந்தப் படத்தில் அவரது நண்பராக நடித்தவர் தென்னரசு. இந்த படத்திற்கு பிறகு தென்னரசு பல படங்களில் ஹீரோவின் நண்பர், வில்லனின் அடியாள் மாதிரியான கேரக்டர்களில் நடித்தார்.

தென்னரசு மயிலாப்பூரில் உள்ள நொச்சி நகரில் வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே இருந்துள்ளார். வீட்டில் உள்ளவர்களுக்கும் தென்னரசுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தென்னரசு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>