×

யாஷிகாவின் ரகசிய காதலன்

ஹீரோயினாகவும் ஒரு பாடலுக்கும் ஆடி வருகிறார் யாஷிகா ஆனந்த். இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட இவர், அடுத்து தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே தான் காதலிக்கும் நபரை பற்றி சொல்லியிருக்கிறார் யாஷிகா. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் டேட்டிங்கில் இருப்பதாகவும் அது ரொமான்டிக் தருணம் என்றும் ஒரு பதிவிட்டு, ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தில் தனது காதலரின் கரங்களை பிடித்தபடி யாஷிகா போஸ் தந்தார். இந்த புகைப்படத்தில் யாஷிகாவின் முகம் மட்டும் தெரிகிறது. அந்த பக்கத்தில் இருக்கும் அவரது காதலரின் கைகள் மட்டுமே புகைப்படத்தில் வெளியாகியுள்ளது. அந்த நபர் யார் என்பதை இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்கிறார் யாஷிகா.

Tags : Yashika ,lover ,
× RELATED மாயமான மனைவி குறித்து பதில்...