×

ருத்ரதாண்டவம் ஆடிய மாண்டஸ் புயல்: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 விசைப்படகுகள் நீரில் மூழ்கின.. மீனவர்கள் வேதனை..!!

சென்னை: மாண்டஸ் புயலால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 விசைப்படகுகள் மூழ்கின. வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை சென்னையை ஒட்டி கரையை கடந்த நிலையில், சுமார் 65-85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது. இதன் காரணமாக சென்னை மெரினா, கோவளம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் அலை ஆக்ரோஷமாக எழுந்தது. தமிழகத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரம் தடைபட்டது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இரவு முழுவதும் ஈடுபட்டனர். இந்நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நீரில் மூழ்கியதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். புயல் கரையை கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதால் 100 விசைப்படகுகள் சேதமடைந்தது. சேதமடைந்த படகுகள் ஒவ்வொன்றும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளவை. விசைப்படகுகள் மூழ்கியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். விசைப்படகுகள் சேதம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மீன்வளத்துறை இயக்குநர் பழனிசாமி, இணை இயக்குநர் ரீனா உள்ளிட்டோர் சேதமடைந்த படகுகளை பார்வையிட்டனர். புயல் கரையை கடந்த பின் கடலுக்குள் செல்ல படகில் வைக்கப்பட்டு இருந்த ஐஸ் பெட்டி, உணவு பொருட்கள், வலைகளும் சேதமடைந்தது. சேதமடைந்த படகுகளை மறு கட்டமைப்பு செய்யவும், மூழ்கிய படகுகளுக்கு முழுமையாகவும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, கடன் பெற்று கட்டப்பட்ட படகுகள் சேதமடைந்திருப்பின் அல்லது மூழ்கி இருப்பின் அதற்கான கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் படகு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கோரைக்குப்பம் மீனவக்கிரமத்தில் சுமார் 20 வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 படகுகள், 40 இன்ஜின்கள், மீன்பிடி வலைகள் சேதமடைந்தது. சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணமும், மாற்று இடமும் அரசு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post ருத்ரதாண்டவம் ஆடிய மாண்டஸ் புயல்: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 விசைப்படகுகள் நீரில் மூழ்கின.. மீனவர்கள் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags : Storm Mandus ,Rudratandavam ,Kasimedu fishing port ,CHENNAI ,Mandus ,Bay of Bengal ,
× RELATED புரட்டாசி மாத சனிக்கிழமைகள்...