கோலிவுட்டில் டாப்ஸி

ஆடுகளம் படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் டாப்ஸி. பிறகு தெலுங்கு படங்களிலும் நடித்தார். திடீரென இந்திக்கு சென்றவர், அங்கு பிங்க் படம் மூலம் பிரபலம் ஆனார். பாலிவுட்டுக்கு செல்பவர்கள், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவை உடனே மறந்துவிடுவார்கள். மீண்டும் தென்னிந்திய பட வாய்ப்புகள் வந்தாலும் ஏற்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் மற்ற நடிகைகளிடமிருந்து வித்தியாசப்படுகிறார் டாப்ஸி. இந்தியில் பிசியாக நடித்து வந்தாலும் தமிழில் வாய்ப்பு வந்தால் உடனே ஏற்றுக்கொள்கிறார். கடந்த வருடம், கேம் ஓவர் படத்தில் நடித்தார். இப்போது ஜெயம் ரவி ஜோடியாக ஜனகணமன படத்திலும் விஜய் சேதுபதியுடன் அனபெல் சுப்பிரமணியம் படத்திலும் நடித்து வருகிறார். ‘எந்த மொழியில் நடிக்கிறேன் என எப்போதும் யோசித்து பார்த்தது கிடையாது. நல்ல கதையுடன் எனது கேரக்டர் வலுவாக இருந்தால் அதில் நடிக்க முன்னுரிமை தருகிறேன். அப்படித்தான் தொடர்ந்து தமிழில் நடித்து வருகிறேன்’ என்றார் டாப்ஸி.

Related Stories: