×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தி.மலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், பனப்பாக்கத்தில் தலா 20 செ.மீ. மழை பதிவானது. காஞ்சிபுரத்தில் 19 செ.மீ., செய்யாறில் 18 செ.மீ., ஆவடியில் 17 செ.மீ., திருத்தணி, காட்டுக்குப்பத்தில் தலா 16 செ.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அயனாவரம், குன்றத்தூரில் தலா 15, அரக்கோணம், உத்திரமேரூர், பெரம்பூரில் தலா 14 செ.மீ. மழை பதிவானது. கும்மிடிப்பூண்டி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், சோழவரம், பள்ளிப்பட்டுவில் தலா 13 செ.மீ. மழை பதிவானது. எம்.ஜி.ஆர்.  நகர், ஆலந்தூர், ஊத்துக்கோட்டையில் தலா 13, அம்பத்தூர், செங்குன்றத்தில் தலா 12 செ.மீ. மழை பொழிந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 11 செ.மீ., மீனம்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே பாடியில் 2 வீடுகளின் மேல் ராட்சத மரம் விழுந்தது. இதனிடையே, தமிழகத்தில் 33 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லையிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது….

The post தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தி.மலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vembak, Thimalai district ,Chennai ,Vembagam ,Tiruvannamalai district ,Ranipet ,Vembakam ,T. Malai district ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...