×

வத்திராயிருப்பு பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள்-கொள்முதல் நிலையம் அமையுமா…

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பகுதியில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், ராமசாமியாபுரம், கூமாப்பட்டி, பிளவக்கல் அணை, நெடுங்குளம், மகராஜபுரம், மாத்தூர் ரெங்கபாளையம் உள்ளி்ட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் நெற்கதிர்கள் வளர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதன்படி இன்னும் சில நாட்களில் இப்பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் அறுவடை செய்த நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக வத்திராயிருப்பு, ராமசாமியாபுரம், கான்சாபுரம், மற்றும் மகாராஜபுரம் பகுதியிலும் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் நெல் கொள்முதல் பணிகளில் காலதாமதம் ஏற்படாத வகையில் விவசாயிகள் கொண்டுவந்த உடன் தரம், ஈரப்பதம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து கொள்முதல் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதிகளில் தற்போது நெற்கதிர் விளைச்சல் முழுமையடைந்துள்ளதால் சில நாட்களில் அறுவடை பணிகள் துவங்கப்பட உள்ளது. எனவே கடந்த ஆண்டு போலவே தற்போதும் இப்பகுதிகளில் அரசு தரப்பில் கொள்முதல் நிலையங்களை விரைவாக அமைக்க வேண்டும். ஏனெனில் அறுவடை செய்யப்பட்ட பின் நீண்ட தூரம் நெல்லை கொண்டு செல்வது, அங்கு பல நாட்கள் காத்திருப்பது போன்ற தாமதங்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோல் நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்திருக்கும்போது மழை பெய்தால் ஈரப்பதம் அதிகமாகி நெல் மணிகள் வீணாகி விடும். எனவே இப்பகுதியில் விரைவாக அரசு தரப்பில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றனர்….

The post வத்திராயிருப்பு பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள்-கொள்முதல் நிலையம் அமையுமா… appeared first on Dinakaran.

Tags : Vathirairipu ,Kanchapuram ,Ramasamiyapuram ,Coomapatti ,Plavakkal Dam ,Nedungulam ,Maharajapuram ,Mathur Rengapalayam ,
× RELATED வ.புதுப்பட்டியில் தீ தடுப்பு சிறப்பு பயிற்சி