×

தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஆன்லைனில் விற்பது எப்படி? நடிகை நிலா கேள்வி

தமிழில் அன்பே ஆருயிரே படத்தில் அறிமுகமானவர், நிலா. தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜெகன்மோகினி உள்பட பல படங்களில் நடித்தார். இந்தியில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கிறார். தற்போது திரையுலகில் குறிப்பாக கன்னடம் மற்றும் பாலிவுட்டில் போதை பொருட்கள் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல முன்னணி நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிலா கூறுகையில், ‘தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்களில் சில ஆன்லைனில் எளிதாக கிடைக்கிறது. குறிப்பாக, கஞ்சா செடியில் இருந்து தயாராகும் ஒருவித எண்ணெய் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், முன்னணி ஆன்லைன் நிறுவனத்தின் மூலம் இதை வாங்கலாம். இதுகுறித்து நன்கு சோதனை செய்து பார்த்த பிறகே வெளியில் சொல்கிறேன். இந்த விற்பனை சட்டவிரோதமாக இருந்தால், இதை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Actress ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...