போதை பொருள் விவகார விசாரணை: தீபிகா படுகோன் உள்பட நடிகைகளின் செல்போன்கள் பறிமுதல்

போதை பொருள் வழக்கில் விசாரணைக்கு சென்ற நடிகைகளின் செல்போன்களை, போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். பாலிவுட்டை சேர்ந்த பல நடிகைகள், போதை பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ளனர். முன்னணி நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஸ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து சில நாட்களுக்கு முன் ரகுல் பிரீத் சிங்கிடம் 4 மணி நேரமும், நேற்று முன்தினம் தீபிகா படுகோனிடம் 5 மணி நேரமும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர். பிறகு ஸ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் கலந்துகொண்ட தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஸ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோரின் செல்போன்களை போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். போதை பொருள் தொடர்பான அவர்கள் யார், யாருடன் பேசி இருக்கிறார்கள் என்பதை கண்டறிய போலீசார் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>