இளைஞர்கள் அபாயகரமான பயணம்: நடவடிக்கை எடுக்க நடிகர் விஷ்ணு விஷால் கோரிக்கை

தமிழ் சினிமா துறையில் விஷ்ணு விஷால் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் அப்டேட்கள் பலவற்றையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு தான் சந்தித்த ஒரு சம்பவம் பற்றி பதிவிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். அவர் ஹைதராபாத்துக்கு சென்றிருக்கும் நிலையில் சாலையில் சில இளைஞர்கள் காரில் உள்ளே உட்காராமல் கதவின் மீது அமர்ந்து கொண்டு அபாயகரமான வகையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கும் அவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள் என்று தான் விஷ்ணு புகார் கூறியிருக்கிறார். வீடியோவில் அந்த இளைஞர்களின் கார் நம்பரையும் தெளிவாக காட்டி இருக்கிறார்.

"நம் நாட்டின் படித்த இளைஞர்கள். வழக்கமாக நான் இப்படி செய்ய மாட்டேன். ஆனால் இப்படியொரு பதிவை போட வேண்டியதாகிவிட்டது. ஏனென்றால் அவர்கள் தங்கள் உயிரை மட்டும் ஆபத்தில் வைக்காமல் தேவையில்லாத ஸ்டன்ட் செய்து மற்றவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுத்துகிறார்கள். ஹைதராபாத் சிட்டி போலீஸ் இதை பாருங்கள்" என ட்வீட்டில் விஷ்ணு குறிப்பிட்டிருக்கிறார். தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் விஷ்ணு விஷால் நேற்று இரவு வெளியில் சென்ற போது தான் இப்படி ஒரு சம்பவத்தை பார்த்திருக்கிறார்.

Related Stories:

>