×

மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை..!

சென்னை: மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாண்டஸ் புயலால் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இன்று காலையும் மழை தொடர்ந்தது. மழையால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வழக்கத்தை விட பலத்த மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிருவனத்தின் ரயில் நிலையங்களின் மேற்கூரைகள் மற்றும் இதர பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் இதன் மதிப்பீடு தோராயமாக ரூபாய் 3 கோடியே 45 லட்சத்து 448 ஆக இருக்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு, புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ, ஈக்காட்டுதாங்கல், சின்னமலை, கிண்டி ஆகிய மெட்ரோ இரயில் நிலையங்களின் மேற்கூரைகள் நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் மாண்டஸ் புயல் தாக்கத்தில் பாதிப்பு அடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, அண்ணாநகர், அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வழிக்காட்டிப் பலகைகளும், இதர பொருட்களும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது. கோயம்பேடு பணிமனை, திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் இடம் ஆகிய பகுதிகளில் மரங்கள், குழாய் உடைப்பு போன்ற சிறு சேதங்களும் ஏற்பட்டுள்ளது. இந்த சேத மதிப்பீட்டை 4 குழுக்களாக பிரிந்து 41 மெட்ரோ இரயில் நிலையங்களில் தற்காலிக சேத மதிப்பீட்டை கணக்கிட்டுள்ளனர். சேதம் அடைந்த மேற்கூரைகள் மற்றும் இதர பொருட்களை சீரமைப்புக்கும் பணிகளை உடனே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. …

The post மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை..! appeared first on Dinakaran.

Tags : Mandas ,Chennai Metro Railway Administration ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...