×

சிரஞ்சீவி மருமகளுடன் சேர்ந்து புதிய பிசினஸ் தொடங்கினார் சமந்தா

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரணின் மனைவி உபாசனா, யுவர்லைப் என்ற இணையதள பத்திரிகை ஒன்று தொடங்கி உள்ளார். இதில் உடல் ஆரோக்கியம், யோகாசனம், உடற்பயற்சி, ஊட்டச்சத்து உணவுகள், ஆரோக்கியமான சமையல் குறிப்புகள் உள்ளிட்டவை தொடர்பான செய்திகள், கட்டுரைகள் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் உள்ள முன்னணி மருத்துவ நிபுணர்கள், யோகா மாஸ்டர்கள், பயிற்சியாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள், சமையல் நிபுணர்கள் இதில் தங்கள் பங்களிப்பை செய்கிறார்கள். இதன் ஆசிரியையாக உபாசனா இருக்கிறார். இந்த நிலையில் அவர் நடிகை சமந்தாவை இதன் சிறப்பு ஆசிரியையாக நியமித்துள்ளார். இதில் சமந்தாவும் தனது உடற்பயிற்சி, யோகா, மருத்துவ அனுபவங்கள் குறித்து எழுத இருக்கிறார். இந்த இணையதளத்தில் சமந்தாவும் பார்ட்னராக இணைந்துள்ளார்.

Tags : Samantha ,daughter-in-law ,Chiranjeevi ,
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி