×

போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது: 1000 மாத்திரைகள், ஆட்டோ, பைக் பறிமுதல்

சென்னை: போரூர் குன்றத்தூர் சாலை விக்னேஸ்வரா நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த 2 பேரிடம் போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில்,  சூளைமேட்டை் சேர்ந்த மருந்து கடை உரிமையாளர் அஜய் (23) மற்றும் திருவான்மியூரை சேர்ந்த அவரது நண்பர் தீபன் (29) என்பதும்,  ஆன்லைன் மூலமாக மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரிய வந்தது. பின்னர், அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து  தடை செய்யப்பட்ட 1000 போதை மாத்திரைகள், ஒரு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்….

The post போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது: 1000 மாத்திரைகள், ஆட்டோ, பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Porur Kuntharatur Road Vigneswara Nagar ,
× RELATED சென்னை தியாகராய நகரில் அரசு பேருந்தின் மீது ஆட்டோ மோதி விபத்து