×

அக்‌ஷரா திடீர் முடிவு

கமல்ஹாசனின் மூத்த வாரிசு ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பு, இசை, பாட்டு, நடனம் ஆகியவற்றில் சாதிக்க ஆர்வம். இளைய வாரிசு அக்‌ஷரா ஹாசனுக்கு டைரக்‌ஷனில் சாதிக்க ஆசை. இதற்காக பாலிவுட் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பிறகு கமல்ஹாசன் இயக்கிய சபாஷ் நாயுடு படத்தில் பணியாற்றினார். ஆனால், எழுதிய ஸ்கிரிப்ட்டுக்கு தயாரிப்பாளரை தேடி, ஹீரோவை ஒப்பந்தம் செய்து படம் இயக்குவது என்பது கடினமான காரியம் என்பதை புரிந்துகொண்ட அவர், இனி நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். தற்போது ராஜா ராமமூர்த்தி இயக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற படத்தில் நடிக்கும் அக்‌ஷரா ஹாசன், தந்தையின் புதிய படத்தில் நடிக்க அப்ளிகேஷன் போட்டுள்ளாராம். ஆனால், இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்கவில்லையாம்.

Tags : Akshara ,
× RELATED பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது...