×

பீரியட் கதையில் டாப்ஸி

ஜெயம் ரவி ஜோடியாக ஜனகனமண என்ற படத்தில் நடிக்கும் டாப்ஸி, பாலிவுட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், தமிழிலும் பலமாக வேரூன்றுவதில் அதிக கவனம் செலுத்துகிறார். சில வருடங்களுக்கு முன் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான படத்தில் நடித்தபோது, அப்படத்தின் ஹீரோவுடன் கிசுகிசுக்கப்பட்ட அவர், தமிழ்நாட்டிலேயே செட்டிலாகிவிடுவாரோ என்று நினைக்க வைத்தது. ஆனால், வலையில் சிக்காமல் நழுவி விட்டாராம் ஹீரோ. தற்போது விஜய் சேதுபதியும், டாப்ஸியும் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் பீரியட் போர்ஷன், நிகழ்கால போர்ஷன் என இரண்டு காலக்கட்டங்களில் காட்சிகள் படமாக்கப்படுகிறது. விஜய் சேதுபதியும், டாப்ஸியும் இரட்டை வேடத்தில் நடிக்கின்றனர். தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார்.

Tags : Topsy ,
× RELATED மிதாலி ராஜ் கதையில் டாப்ஸி