ஹீரோயின் கதையில் ஐஸ்வர்யா லட்சுமி

மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு, விஷால் நடித்த ஆக்‌ஷன் என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் அவர், மலையாளத்தில் 3 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஹீரோயினுக்கு அதிகமான முக்கியத்துவம் கொண்ட கதையில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அது இப்போது அர்ச்சனா 31 நாட்அவுட் என்ற படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. தவிர, தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன். இதில் நடித்துள்ள எனக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்று தெரிந்துகொள்வதற்கு காத்திருக்கிறேன். மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாகவும், டொவினோ தாமஸ் ஜோடியாகவும் இரு படங்களில் நடிக்கிறேன்’ என்றார்.

Related Stories:

>