முந்தானை முடிச்சு ரீமேக்கில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ்

ஏ.வி.எம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் 1983ல் வெளியான படம், முந்தானை முடிச்சு. இதை கே.பாக்யராஜ் இயக்கி நடித்தார். ஊர்வசி ஹீரோயினாக அறிமுகமானார். மற்றும் பூர்ணிமா ஜெயராம், கோவை சரளா, தீபா, தவக்களை உள்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்தார். தற்போது இந்தப் படம் 37 வருடங்கள் கழித்து ரீமேக் செய்யப்படுகிறது. கே.பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார், ஊர்வசி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரிக்கிறார். இதில் நடிப்பது குறித்து சசி குமார் கூறியதாவது:

சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியபோது, பாக்யராஜ் மகன் சாந்தனுவை நடிக்க கேட்டு பல்வேறு காரணங்களால் அவரால் நடிக்க முடியாத நிலையில், ஜெய்யை நான் ஒப்பந்தம் செய்துவிட்டேன். தற்போது பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் முந்தானை முடிச்சு பட ரீமேக்கில், அவர் நடித்திருந்த வேடத்தில் நடிக்கிறேன். இது முதல் பாகத்தின் தொடர்ச்சி கிடையாது. இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப முந்தானை முடிச்சு ரீமேக் கதை உருவாக்கப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் இயக்குனர் முடிவாகவில்லை. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு திரைக்கு கொண்டு வருகிறோம்.

Related Stories:

More