வில்லியாக நடிக்கிறார் தமன்னா

இந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 2018ல் வெளியான படம், அந்தாதூன். இதில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடித்திருந்தனர். தி பியானோ டியூனர் என்ற பிரெஞ்சு குறும்படத்தை தழுவி உருவாக்கப்பட்டிருந்த இப்படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த இந்திப் படம் என, 3 தேசிய விருதுகள் கிடைத்தது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கி இருக்கிறார். இதை மோகன் ராஜா இயக்க உள்ளார். பிரசாந்த், கார்த்திக், யோகி பாபு நடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் வேடங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில், அந்தாதூன் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல் நேற்று வெளியிடப்பட்டது. மெர்லபாகா காந்தி இயக்குகிறார். நிதின் ஹீரோவாக நடிக்கிறார். தபு நடித்திருந்த வில்லி கேரக்டரில் தமன்னா நடிக்கிறார். ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷ் நடிக்கிறார். வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ரிலீசாகிறது.

Related Stories:

>