×

வாலிபருக்கு செயற்கை கால் சோனு சூட் உதவுகிறார்

கால் இழந்த மாற்றுத்திறனாளி வாலிபருக்கு செயற்கை கால் பொருத்த உதவுகிறார் நடிகர் சோனு சூட். ஊரடங்கு சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் சோனு சூட். கொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களுக்கு அவர் உதவி வருகிறார். இந்நிலையில் தினேஷ் மணிகண்டா என்ற 20 வயது இளைஞர், டிவிட்டரில் சோனு சூட்டுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அதில் அவர் கூறும்போது, ‘ஒரு விபத்தில் எனது இடது கால் இழந்துவிட்டேன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் நான். எனது அப்பா டெய்லராக இருக்கிறார். செயற்கை கால் பொருத்த ரூ.7 லட்சம் செலவாகும் என டாக்டர்கள் கூறினர். நீங்கள்தான் உதவ வேண்டும்’ என தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவருக்கு பதிலளித்த சோனு சூட், ‘இந்த வாரத்தில் உனக்கு கால் கிடைத்துவிடும். இதை உன் பெற்றோரிடம் சொல்லிவிடு’ என கூறியுள்ளார்.

Tags : teenager ,
× RELATED கொரோனா மீட்பு பணி: சோனு சூட்டுக்கு ஐ.நா விருது