×

நாடக கலைஞர்களுக்கு உதவ அமைச்சரிடம் பாக்யராஜ் கோரிக்கை

நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் உள்ளார். அவர் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், தமிழகத்தில் வாழும் அனைத்து நாடக கலைஞர்கள் மற்றும் கலை நிகழ்ச்சி நடத்தும் கலைஞர்கள் கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பு இன்றி வறுமையில் வாடுகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் தொழில் மூலம் வாழ்வாதாரத்தை மீட்க அரசு உதவி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Bhagyaraj ,artists ,
× RELATED வேண்டுதலை நிறைவேற்றும் திருநின்ற நாராயண பெருமாள்