ஐஸ்வர்யாவுடன் நந்திதா மோதலா?

திரையுலகில் ஒரு நடிகையின் வளர்ச்சி இன்னொரு நடிகைக்கு பிடிக்காது. ஆனால், அட்ட கத்தி என்ற படத்தில் இணைந்து நடித்த பிறகு நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர். ஒருவருக்கு ஒருவர் புதுப்பட வாய்ப்பு பெறுவது எப்படி என்பது முதல், எந்த விழாவுக்கு எந்த மாதிரி டிரெஸ் அணிந்து செல்ல வேண்டும் என்பது வரை வீடியோகாலில் பேசி முடிவு செய்கின்றனர். ஆனால், ஐஸ்வர்யாவின் திரையுலக வளர்ச்சியை ஒப்பிடும்போது, நந்திதாவின் வளர்ச்சி மிகவும் குறைவு.

இதுபற்றி நந்திதாவிடம் கேட்டபோது, கோபப்படுவதற்கு பதில் சிரித்தார். ‘யாருக்கு என்ன தலைவிதியோ அதுதான் நடக்கும். நானும், ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகள். அவரால் நடிக்க முடியாத எத்தனையோ கதைகளை எனக்கு சொல்லும்படி பல இயக்குனர்களிடம் சிபாரிசு செய்துள்ளார். மற்றபடி எங்களுக்குள் கருத்து மோதலோ அல்லது வாய்ப்பு பெறுவதற்கான சண்டையோ நடந்தது கிடையாது. இனிமேலும் இப்படித்தான் இருப்போம். தயவுசெய்து எதையாவது எழுதியோ, பேசியோ எங்கள் நட்பை பிரித்துவிடாதீர்கள்’ என்றார். மீண்டும் இவர்கள் இருவரும் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் நடித்துள்ளனர்.

Related Stories:

>