அட்லி இயக்கத்தில் தீபிகா

தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் தீபிகா படுகோன். ஆனால் அந்த படத்தை அனிமேஷனில் உருவாக்கியதால் தீபிகாவை யாராலும் ரசிக்க முடியவில்லை. இந்நிலையில் அவரை தமிழில் நேரடி படத்தில் நடிக்கவைக்க சிலர் முயற்சித்தனர். பாலிவுட்டில் பிசியாக இருந்ததால் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் பிரபாஸ் ஜோடியாக புதிய படமொன்றில் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் அவர் நடிக்க உள்ளார். அதேபோல் அட்லி இயக்கும் படத்திலும் அவர்தான் ஹீரோயின் என சொல்லப்படுகிறது. அட்லி இந்தியில் ஷாருக்கானை இயக்க கதை சொல்லியிருக்கிறார்.

இந்த படத்தில் ரா உளவுப்பிரிவு அதிகாரியாக ஷாருக்கான் நடிக்கிறார். ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை அட்லி இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நடிக்க தீபிகாவிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. ஷாருக்கானுடன் ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்து அறிமுகம் ஆனவர்தான் தீபிகா. எனவே தனக்கு வாய்ப்பு கொடுத்த ஷாருக்கானுடன் மீண்டும் நடிக்க அவர் மறுக்க மாட்டார் என பாலிவுட்டில் பேசப்படுகிறது.

Related Stories:

>