நடிகை மியா ஜார்ஜ் திருமணம்: தொழிலதிபரை மணந்தார்

பிரபல நடிகை மியா ஜார்ஜ், தொழிலதிபர் ஆஷ்வின் பிலிப் திருமணம் நேற்று எர்ணாகுளத்தில் நடந்தது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர், மியா ஜார்ஜ். ஒரு ஸ்மால் பேமிலி, டாக்டர் லவ், இ அடுத்த காலத்து, சேட்டாயீஸ், மெமரிஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் அமர காவியம், இன்று நேற்று நாளை, எமன், ஒரு நாள் கூத்து, வெற்றி வேல், ரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா என்ற படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

மியா ஜார்ஜுக்கும், எர்ணாகுளத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்வின் பிலிப்புக்கும் கடந்த மே 30ல் நிச்சயதார்த்தம் நடந்தது. இதை தொடர்ந்து கடந்த மாதம் எர்ணாகுளம் ேதவாலயத்தில் மணமக்கள் சம்மதம் தெரிவிக்கும் சடங்கு நடந்தது. இந்நிலையில் மியா ஜார்ஜ், ஆஷ்வின் பிலிப் திருமணம் நேற்று பிற்பகல் 3 மணிக்கு எர்ணாகுளம் செயின்ட் மேரீஸ் தேவாலயத்தில் நடந்தது. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. கொரோனா லாக்டவுன் என்பதால், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தொடர்ந்து நடிக்க மியா ஜார்ஜ் முடிவு செய்துள்ளார்.

Related Stories:

>