ஓடிடி தளத்தில் வெளியாகிறது விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'க/பெ ரணசிங்கம்'

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'க/பெ ரணசிங்கம்' ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை பெ.விருமாண்டி இயக்கியுள்ளார்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் 'பூ' ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது, 'க/பெ. ரணசிங்கம்' திரைப்படம் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இது திரையரங்குகள் பாணியில் காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையாகும். இந்தப் பாணியில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக 'க/பெ. ரணசிங்கம்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>