×

அஜித்தை பார்க்காத இயக்குனர்

அருண் விஜய், ஷாம் நடித்த இயற்கை, ஜீவா நடித்த ஈ, ஜெயம் ரவி நடித்த பேராண்மை, விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, ஷாம் நடித்த புறம்போக்கு ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் லாபம் படத்தை இயக்கி வருகிறார், எஸ்.பி.ஜனநாதன். ‘தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி ஆய்வுகள் செய்து, அதை சினிமா படமாக்க நினைத்து, ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அணுகினேன். ஆனால், நான் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. 

தற்போது லாபம் படத்தை உருவாக்குகிறேன். முன்னணி ஹீரோக்களை வைத்து நான் படம் இயக்காதது ஏன் என்று கேட்கிறார்கள். நான் இயக்கும் அனைவரும் மக்களுக்கு நன்கு தெரிந்த நடிகர்கள்தான். கதையை உருவாக்கிய பிறகுதான் நடிகர், நடிகைகளை தேடுகிறேன்’ என்ற அவர், இதுவரை அஜித் குமாரை நேரில் பார்த்ததில்லை என்றார்.

Tags : Ajith ,
× RELATED சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர்...